மோடி அரசு பதவியேற்று மூன்று நாள் முடியவில்லை! தமிழர்கள் மூன்றாவது பிரச்சனையை சந்திக்கிறோம். 1.ஹிந்தித் திணிப்புக்காக புதிய கல்விக் கொள்கை. 2.அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை தகுதி இரத்தால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது தமிழம். 3.தற்போது நடுவண் அரசு வழங்கும் செம்மொழிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான குடிஅரசு தலைவர் விருதுகள் பட்டியலில், தமிழ் மொழிக்கு இடம் தராமல் விட்டிருப்பது. 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசு வழங்கும் செம்மொழிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான குடிஅரசு தலைவர் விருதுகள் பட்டியலில், திட்டமிட்டு தமிழ் மொழிக்கு இடம் தராமல் விட்டிருக்கிறது பாஜக மோடி அரசு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செய்தி இதழ்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. 'இந்தியாவின் செம்மொழிகளில் சிறந்தவர்களுக்கான குடிஅரசு தலைவர் விருது' என்கிற விருதுக்கு விண்ணப்பிக்க கோருகிறது இந்த விளம்பரம். அதாவது செம்மொழிகளில் சிறந்து விளங்கும் 60 அகவைக்கு மேற்பட்டவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ரூ5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த விளம்பரத்தில், சமஸ்கிருதம், பாலி, அரபிக், பெர்சியன், செம்மொழி ஒரியா, செம்மொழி கனடா, செம்மொழி தெலுகு, செம்மொழி மலையாளம் என பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் இதில் செம்மொழி தமிழ் இடம்பெறவில்லை. ரொம்ப நல்லது மோடி! நமக்கு உரியதை ஒருவர் பிரச்சனை செய்யாமல் வழங்கி விட்டால் அது நல்லது. ஆனால் அவர் அதை வழங்காவிட்டால் ரொம்ப நல்லது. ஏனென்றால் பிரச்சனையை நாம் செய்யலாம். ஆம் மோடி! உங்கள் இந்த நடவடிக்கை ரொம்ப நல்லது மோடி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,171.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



