Show all

காந்தியாருக்கு எதிரான முழக்கம் அவ்வப்போது ஓங்கி ஒலிக்கிறது! யாரெல்லாம்? எந்த அமைப்பின் கீழ்? ஏப்போது தெரியவரும்?

இந்தியா விடுதலை பெற்றவுடன் காந்தியார் அவர்கள் காங்கிரசைக் கலைக்கச் சொன்னார். ஆனால் காங்கிரஸ் தான் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர் காங்கிரஸ் இல்லை. காந்தியாருக்கு எதிரான முழக்கம் அவ்வப்போது ஓங்கி ஒலிக்கிறது! யாரெல்லாம்? எந்த அமைப்பின் கீழ்? ஏப்போது தெரியவரும்?

19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மும்பை மாநகராட்சியில் துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் நிதி சவுத்ரி. இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான இவர் கடந்த மாதம் தனது கீச்சுப் பதிவில், 'உலகம் முழுவதும் காந்தி சிலைகளை அகற்றுங்கள், அவர் பெயர் வைத்துள்ள இடங்களில் பெயரை மாற்றுங்கள், ரூபாய் தாளில் அவரின் புகைப்படத்தை நீக்குங்கள்' என்று தெரிவித்திருந்தார். 

மேலும் அந்தக் கீச்சுப் பதிவில் காந்தியாரின் 150-வது பிறந்த நாளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் வழக்கத்தில் இல்லாதது. அவரின் உருவத்தை ரூபாய் தாளில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் உலகில் உள்ள காந்தியின் சிலைகள் அனைத்தும் அகற்றப் பட வேண்டும். அவரின் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை ஆகியவற்றுக்கு வேறு பெயர் வைக்க வேண்டும். காந்தியாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி' என குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்தக் கீச்சுப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் நிதி சவுத்ரிக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். காந்தியாரை அவமானப் படுத்தியும், கொலையாளி கோட்சேவை புனிதப்படுத்தியும் பேசியுள்ள பெண் அதிகாரி நிதி சவுத்ரி மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. 

கண்டனங்கள் வலுத்ததையடுத்து சர்ச்சைக்குரிய அந்த கீச்சுப் பதிவை நீக்கியுள்ளார் நிதி சவுத்ரி. அந்த கீச்சை நீக்கிய நிதி சவுத்ரி, 'காந்திக்கு எதிரானவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். காந்தியாருக்கு எதிரான முழக்கம் அவ்வப்போது ஓங்கி ஒலிக்கிறது! யாரெல்லாம்? எந்த அமைப்பின் கீழ்? ஏப்போது தெரியவரும்? என்பதுதான் என்னுடைய கேள்வி' அவர்களுடைய கருத்தை எகத்தாளமாக தெரிவித்ததுதான் என்னுடைய பதிவு. குழப்பமாக புரிந்து கொள்ள வாய்ப்பளித்து விட்ட என்னுடைய பதிவை நீக்குகிறேன் என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய பழைய கீச்சுகளையெல்லாம் ஆய்வு செய்து பாருங்கள் நான் அப்படிப் பட்டவள் இல்லை என்று தெரியவரும் என்கிறார்.   

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,171.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.