ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம், பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நாளை நடைபெறும். 08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்தத் தேரோட்டததைத் தள்ளி வைக்க வேண்டும் என ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்தத் தேரோட்ட விழாவை தற்போது நடத்தினால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கடந்த வியாழனன்று இந்த தேரோட்டத்திற்கு தடை விதித்தது உத்தரவிட்டது. இந்தத் தேரோட்டம் நடத்த அனுமதித்தால் ஜெகன்நாதர் நம்மை மன்னிக்கமாட்டார். தற்போதைய கொரோனா சூழலில் ஏராளமான மக்கள் கூடுவதை அறங்கூற்றுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் நலன் கருதி இந்தத் தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அறங்கூற்றுவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அறங்கூற்றுவர்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனுக்கள் பதிகை செய்யப்பட்டன. பூரி ஜெகன்நாதர் கோயிலின் சங்கராச்சாரி சாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, கோயிலின் தேரோட்டத்தை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நீதிபதிகளின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியர் சுவாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று அறங்கூற்றுவர் ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தேரோட்டத்திற்கு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அனுமதி அளிக்குமாறு நடுவண் அரசு வாதிட்டது. கொரோனா நுண்நச்சு தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் இந்த ஆண்டு பூரி ஜெகன்நாத் தேரோட்டம் நடத்த அனுமதிக்கலாம். பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் நிறுத்தப்படக்கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய பாடு. ஜெகன்நாதர் நாளை வெளியே வராவிட்டால், அவர் பாரம்பரியங்களின்படி 12 ஆண்டுகள் வெளியே வர முடியாது என்று நடுவண் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். இதனையடுத்து ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதியளித்து உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 12 நாட்கள் நடைபெறும் பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையை நடத்த அனுமதித்தால் ஜெகன்நாதர் நம்மை மன்னிக்கமாட்டார். தற்போதைய கொரோனா சூழலில் ஏராளமான மக்கள் கூடுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



