ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருவர் போட்டார் வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன். இது இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் மிகப் பிரபலமாய் இருந்த நாட்டுப்புற பாடல். விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்திற்கு இணையாக இந்தியாவில் எந்த மாநிலமும் எந்தத் துறையிலும் வளர்ச்சி பெற்றிருக்க வில்லை. தமிழ் மக்களின் ஒரே ஒரு குறைபாடு: நடுவண் அரசில்- பணிகளிலோ ஆட்சி அதிகாரத்திலே ஈடுபட முயலவே யில்லை என்பது மட்டுமே. தொடர்ந்து 70 ஆண்டுகளாக வட மாநில மக்களின் காங்கிரஸ்- தமிழகத்தை பொறாமை கண்கொண்டு வீழ்த்தும், வஞ்சிக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டு வந்திருக்கிறது. தற்போது நடுவண் அரசை ஆளும் வட மாநிலத்து மோடி- தமிழகத்தை பொறாமை கண்கொண்டு வீழ்த்தும், வஞ்சிக்கும் அதே முயற்சிகளிலேயே, குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக பண மதிப்பிழப்பு, ஆதார், உணவு பாதுகாப்புத் திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி, ஐட்ரோ கார்பன், இன்றைக்கு நீட் என்று அதிகாரத்தை பயன்படுத்தி வெறுமனே ஆணைகள் போட்டு தமிழகத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை எப்படி சேர்ப்பது என்பதை மாநில அரசு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதை நடுவண் அரசு தீர்மானிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதைவிடக் கொடுமையான அதிகார அத்துமீறல் இருக்க முடியாது. இந்தியாவின் மற்ற எந்த மாநிலங்களிலும் ஒற்றை இலக்க எண்ணிலேயே கல்லூரிகள் உள்ளன. அவர்கள் உமி கொண்டு வருவார்களாம் நமது அரிசியோடு கலந்து எல்லா மாநில மாணவர்களும் ஊதி ஊதி தின்போமாம். இதற்கு தான் நீட்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



