Show all

26 பேர்களை இழந்து 10 பேரைக் கொண்டாடும் நோக்கம் என்ன? அதிமுக தினகரன் அணி கேள்வி

தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், இன்று (ஆகஸ்ட் 22) காலை 10 மணியளவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். சட்;டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தமிழக அரசு இழந்துவிட்டதால் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிட வேண்டும் எனக் கடிதம் வழங்கியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), 2.தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி), 3.பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), 4.எம்.ரங்கசாமி (தஞ்சாவூர்), 5.எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), 6.எஸ்.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), 7.எஸ்.டி.கே.ஜக்கையன் (கம்பம்), 8.ஆர்.சுந்தர்ராஜ் (ஒட்டப்பிடாரம்), 9.ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை), 10.கே.கதிர்காமு (பெரியகுளம்), 11.பி.வெற்றிவேல் (பெரம்பூர்), 12.எஸ்.முத்தையா (பரமக்குடி), 13.டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), 14.எம்.கோதண்டபாணி (திருப்போரூர்), 15.ஆர்.முருகன் (அரூர்), 16.ஆர்.பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்), 17.ஜெயந்தி (குடியாத்தம்), 18.என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), 19.விளாத்திக்குளம் சட்;டமன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

ஆளுநரை சந்தித்துவிட்டு தினகரனைச் சந்திப்பதற்காக அவரது ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

அதிமுகவின் இரு அணிகள் நேற்று இணைந்தன. அதே நேரத்தில் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளர் தினகரனை அவரது இல்லத்தில் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நண்பகலில் வீட்டுக்குள் சென்றவர்கள் இரவு வரை வெளியே வரவில்லை.

இரவு 7.45 மணிக்கு வெளியே வந்த அவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று திடீரென மவுனத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடம் இந்த மவுனம் நீடித்தது.

மவுனம் முடிந்ததும் அனைவரும் சேர்ந்து ‘கழகம் காத்த சட்;டமன்ற உறுப்பினர்கள்;, கழகத்துக்கு புகழ் சேர்த்த சட்;டமன்ற உறுப்பினர்கள்;’ என்று முழக்கமிட்டனர். பின்னர் நிருபர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் கூறியதாவது:

ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகியோர்தான் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். அதை 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டோம்.

122 பேர் ஒன்றுகூடி முதல்வர் பழனிசாமியை ஆட்சி நடத்தச் சொன்னால், அரசுக்கு எதிராக வாக்களித்த, இரட்டை இலையை முடக்கிய 10 சட்;டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை இவ்வளவு அவரசமாக கட்சியில் சேர்க்க வேண்டிய தேவை என்ன? இந்த ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தோமே எங்களிடம் இதுபற்றி கேட்க வேண்டாமா? 9 பேர் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கும் நீங்கள், 26 பேர் வைத்திருக்கும் எங்களை ஏன் கேட்கவில்லை.

அதிமுக சட்டவிதிகளின்படி ஒருவரை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு. அதுபோல பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கும் துணைப் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் உண்டு. நாங்கள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்கிறோம்.

இந்நிலையில், இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். சட்;டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தமிழக அரசு இழந்துவிட்டதால் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் எனக் கடிதம் வழங்கியுள்ளனர்.

நிற்குமா அதிமுக ஆட்சி?

கலைந்தால் தமிழக மக்கள் தேர;வுத்தாள் திருத்தி, சீட்டை கிழிக்க வேண்டியவர்களைக் கிழித்து, அதிர்ச்சி வைத்தியம் வழங்க வேண்டியவர்களுக்கு அதிர்ச்சி அளித்து, சமூக அக்கறை உள்ளவர்களை கொஞ்சம் வளரவிட்டு, அனுபவம் உள்ளவர்களிடம் சிறுபான்மை ஆட்சி வழங்கி கையில் பிடியை வைத்துக் கொண்டு, எதிர் காலத்தில் நல்லாட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.