சட்டங்கள் நீக்கம் செய்யப்படும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று உழவர்கள் தெரிவித்துள்ளதால், இந்தச் சட்டம் ஊத்திக் கொண்டால் தாங்கள் போட்ட எல்லாச்சட்டங்களும் ஊத்தி மூடுவதற்கான சட்டங்களே என்று எல்லா நிலையிலும் பாஜக போட்ட அனைத்துச் சட்டங்களுக்கும எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவிடுமே என்ற அச்சத்தில், பாஜக ஆட்சியாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். உழவர்கள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களில், தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். கலந்துரையாடல் என்ற தலைப்பில், ‘சட்டம் உங்களுக்கானதுதான்’ என்ற ஒன்றிய பாஜக அரசின் சொற்பொழிவுக்கான அழைப்பை உழவர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். சிங்கு எல்லையில், 11 பேர் கொண்ட குழு, தொடர் உண்ணாநிலையைத் தொடங்கியது. நல்ல முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று உழவர்கள் கூறியுள்ளனர். ஒன்றிய பாஜக அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வேளாண் துறைக்கான சட்டங்களான கட்டாயத்தேவைப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த உழவுச் சட்டம், உழவர்களின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, உழவர்களுக்குக் கிடைத்துவரும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உழவர்கள் தொடர் வண்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நாட்கள் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்வண்டி மறியலை கைவிட்டு, டெல்லியை நோக்கி என்ற போராட்டத்தை முன்னெடுத்தனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டிராக்டர், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பிய உழவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான உழவர்கள் டெல்லி எல்லைகளிலும் முகாமிட்டுள்ளனர். உழவர்களின் உற்ற தோழனாக திகழும் டிராக்டர்களை வீடுகளாக்கி அதிலேயே சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்துக்கொண்டு கடந்த 26 நாட்களாக போராடி வருகின்றனர். போராடும் உழவர்கள் பலர் முதியவர்களாக இருப்பதால் குளிர் தாங்காமல் உயிரிழந்து வருகின்றனர். எனினும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பது உழவர்களின் முடிவாகும். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வரும் அனைத்து இடங்களிலும் உழவர்கள் திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக உழவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாள் என தொடர்ச்சியாக உண்ணாநிலையில் இருக்கும். முதலில், சிங்கு எல்லையில், 11 பேர் கொண்ட குழு, தொடர் உண்ணாநிலையைத் தொடங்கியது. அன்றாடம் 11 பேர் கொண்ட குழுவினர் 24 மணிநேரம் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சட்டங்கள் நீக்கம் செய்யப்படும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று உழவர்கள் தெரிவித்துள்ளதால், இந்தச் சட்டம் ஊத்திக் கொண்டால் தாங்கள் போட்ட எல்லாச்சட்டங்களும் ஊத்தி மூடுவதற்கான சட்டங்களே என்று எல்லா நிலையிலும் பாஜக போட்ட அனைத்துச் சட்டங்களுக்கும எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவிடுமே என்ற அச்சத்தில், பாஜக ஆட்சியாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொணர்ந்துள்ள, வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கான, மூன்று கமுக்கச் சட்டங்களை, ‘வேண்டவே வேண்டாம்- எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்று பல்லாயிரம் வட மாநில உழவர்கள் 26வது நாளாக டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



