05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு ஹிந்தி, ஹிந்துத்துவா பரவலாக்கத்திற்கு செய்யும் செலவுகளையும், முயற்சிகளையும், இந்;தக் கிராமங்களுக்கு பயன்படுத்தினால் என்ன என்கிற கேள்விதான் இந்த கிராமம் குறித்து நாம் அறிகிற போது நமக்கு எழுகிற உணர்வாக இருக்கிறது. வெட்டியாக தமிழகத்தில் குழப்பங்களை விளைவித்து வரும் எச்.ராஜா, தமிழிசை, எஸ்.வி.சேகர், மற்றும் தொலைகாட்சிகளில் பாஜகவிற்கு வக்காலத்து வாங்கி பேசி தமிழக மக்களின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிற இத்யாதிகள் இந்த கிராமங்களுக்கு சென்று ஏதாவது உதவலாமே. கந்தமால் மாவட்டம், தஜுங்கியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் பாசா. தாரிங்பாதி நகரில் இருந்து 35 கி.மீ மலைப்பகுதியில் உள்ளது. பாசா கிராமத்திற்கு போக்குவரத்து வசதிகள், மின்சாரம், செல்பேசி, மருத்துவ வசதி, பள்ளிக்கூடம் என எதுவுமே இல்லை. இந்த பாசா கிராமத்துக்கு வர வேண்டுமானால், முறையான சாலைப்பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவு நடந்து தான் வர முடியும். இந்தக் கிராமத்துக்கு மின்வசதி கொடுப்பதற்காக மின்மாற்றிகள் கொண்டுவந்து வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் எந்தவிதமான பணிகளையும் தொடங்கவில்லை. இந்தப் பாசா கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் சில செய்திகளைத் தெரிவிக்க ஊருக்கு நடுவே ஒரு இரும்பு தட்டு தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த இரும்பு தட்டை அடித்து ஒலி எழுப்புவதன் மூலம் மக்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க முடியும். இது குறித்து கிராமத்தின் தலைவர் குமார் சுனம்ஜி கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியான செய்தியை தெரிவிக்க இப்போது இந்த இரும்பு தட்டைத் தட்டி ஒலிஎழுப்பித்தான் தெரிவிக்கிறோம். உதாரணமாக ஒரு நோயாளி அல்லது கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால், 8 முதல் 10 முறை மணி அடிப்போம். யாரேனும் ஊரில் காலமாகிவிட்டால் ஒரு முறை மட்டும் மணி அடிப்போம். இறுதிச்சடங்குக்கு அனைவரும் வரக்கோரி 2 முறை மணி அடிப்போம். கிராம அவைக்கான கூட்டம் நடத்த வேண்டுமானால், 5 முறை மணி அடிப்போம், இங்குள்ள சிறிய தேவாலயத்திற்கு அனைவரும் பிரார்த்தனைக்கு வர வேண்டும் என்பதைத் தெரிவிக்க 3 முறை மணி அடிப்போம். இந்த மணியின் ஓசையைக் கேட்டு மக்கள் உடனடியாக வெளியே வந்து தகவலை அறிந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,917.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



