Show all

பாஜக புளுகு அம்பலமானது; ராபேல் போர் விமான ஊழல்! பிரான்சின் முன்னாள் அதிபர் ஹோலண்டே உறுதியான தகவல்

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராபேல் போர் விமானத்தில் மோடி அரசு ஊழல் செய்திருக்கிறது என்று ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இல்லை இல்லையென்று மறுத்துக் கொண்டிருந்த, கெட்டிக்காரர் மோடியின் புளுகு அம்பலமாகி விட்டது தற்போது. 

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்திய அரசு அனில் அம்பானிக்கு ஆதரவாக இருந்தது என பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியை பங்குதாரராக சேர்த்து கொள்ளும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டது என கூறியதாக செய்திகள் வெளியாகின.

ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை  புறக்கணித்து விட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி அரசு தேர்ந்தெடுத்தது சர்ச்சை ஆகியுள்ளது.

இதுகுறித்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் முன்னாள் தலைவர் சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள சுகோய்30 ரக போர் விமானங்களையே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் தயாரிக்கும்போது, 'ரபேல்' விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும் என்று கூறினார். இதன் மூலம் மோடி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்தப் பேட்டியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, மோடி அரசு பின்னிய பொய் வலைகளை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அம்பலப்படுத்தி விட்டார்.  இந்த ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் குழுமத்தை இணைத்து வைத்தது மோடி அரசுதான் என்று காங்கிரஸ் வெளியிட்ட கீச்சுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 36 ரபேல் வகை போர் விமானங்களை வாங்க, இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. விமானத்தின் உதிரி பாகங்களைத் தயாரிக்கவும், பழுதுபார்க்கவும், ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த நிறுவனம், 42 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் என்றும், காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார். 

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ராகுலுக்கு, ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி அண்மையில் கடிதம் எழுதி அதில், ரபேல் ஒப்பந்தம் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் கீச்சுவில் வெளியிட்ட அறிக்கை: மூடிய அறைக்குள் தலைமை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி ரபேல் ஒப்பந்தத்தை மாற்றியுள்ளார். பிரான்சிஸ் ஹோலாண்டேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். திவாலான அனில் அம்பானிக்கு, பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில், தலைமை அமைச்சர் வழங்கியுள்ளார். நாட்டை தலைமை அமைச்சர் ஏமாற்றியுள்ளார். நமது வீரர்களின் ரத்தத்திற்கு அவமரியாதை செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,917.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.