Show all

கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு! திருவோணம் மாபெரும் பரிசுக்குலுக்கல் பரிசுசீட்டில்

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவோணம் மாபெரும் பரிசுக் குலுக்கலில் திருச்சூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது.

திருவோணம் திருவிழாவிற்காக, கேரள அரசின் மாபெரும் பரிசுக் குலுக்கலுக்காக பரிசுசீட்டுகள் விற்கப்பட்டன. இந்தத் துறை 45 லட்சம் பரிசுசீட்டுகளை அச்சிட்டது. அதில் 43.11 லட்சம் பரிசுசீட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரு பரிசுசீட்;டின் விலை ரூ.250.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கூலித் தொழிலாளியான வத்சலாவிற்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது. அரசின் வருமான வரி பிடித்தம் போக வத்சலாவுக்கு ரூ. 6.34 கோடி கிடைக்கும்.

ஆதத் பகுதியில் வாடகை வீட்டில் தனது 2 மகன்கள், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வரும் வத்சலா முதல் வேலையாக வீடு வாங்க போவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் அவரின் வீடு இடிந்துவிட்டது. அதன் பிறகே அவர் வாடகை வீட்டிற்கு சென்றார்.

பெட்டிக் கடை நடத்தி வந்த வத்சலாவின் கணவர் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பரிசு கிடைத்தது குறித்து வத்சலா கூறியதாவது,

சொந்த வீடு வாங்க வேண்டும். என் மகன் வினிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. புது வீட்டில் வைத்து குழந்தைக்கு பெயர் வைக்க விரும்புகிறோம். என் மகள் விது திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் விபினுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவனின் திருமணம் புது வீட்டில் தான் நடக்கும் என்றார்.

தமிழகத்தில் அண்ணா அவர்களால் தொடங்க பட்ட பரிசுசீட்டு திட்டம், இந்தியா முழுக்க நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில்தான் அது இல்லாமல் போய் விட்டது. மாதம் சிலரை பணக்காரர் ஆக்குகிற அரசே நடத்தும் நம்பகமான பரிசுத் திட்டம் தேவைதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,917.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.