Show all

ஒட்டு மொத்த உலகமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்! ஜம்முவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு அமித்ஷாவின் விளக்கம்

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயக கட்சி, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடாததால் ஆதரவை திரும்பப் பெற்றோம் என பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மெஹபூபா முப்தி ஆட்சிக்கு, பா.ஜ.க கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதையடுத்து அம்மாநிலத்தில் ஆட்சி கவிழ்கப்பட்டது. அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி தனது பதவியை விட்டு விலகினார். இந்நிலையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு, ஒட்டு மொத்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதிபயங்கர காரணத்தை அமித்ஷா வெளிப்படுத்தி இருக்கிறார்: காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தலைமை அமைச்சர் மோடி கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கினார். ஆனால் அதை மெஹபூபா முப்தி அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை. எனவேதான் நாங்கள் அவர்களுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றோம். எங்களுக்கு ஆட்சி முதன்மையானதன்று; மாநிலத்தின் வளர்ச்சிதான் முதன்மையானது, ஏன்று அவர்  குற்றம்சாட்டினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,828. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.