Show all

வாழ்க தூய்மை இந்தியா! 'என்னை அவமானப்படுத்தி விட்டார்கள்' கோஹ்லி, அனுஷ்கா சர்மாவிற்கு கவனஅறிக்கை

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த கிழமை, காரில் வந்து குப்பை கொட்டிய ஒருவரை திட்டுவதான ஒரு காணொளிப் பதிவில், ஏன் இப்படி குப்பை போடுகிறீர்கள் என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார். அந்தக் காணொளி மிகவும் அதிகமாக பகிரவும், விரும்பவும் பட்டது. பலரும், அனுஷ்காவை பாராட்டி இருந்தனர். 

இந்தக் காணொளி அடிப்படையில் அந்தக் காணொளியில் குப்பைக் கொட்டும் நபராக இடம் பெற்ற இளைஞர் ஒருவர், கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு கவனஅறிக்கை அனுப்பி இருக்கிறார். டெல்லியை சேர்ந்த அர்ஹான் சிங் என்ற தொழிலதிபர் தான் அவர். தன்னை கோஹ்லி அனுஷ்கா இருவரும் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று அதில்; குறிப்பிட்டுள்ளார். அவரை குறித்து சமூக வலைதளத்தில் கோஹ்லி மற்றும் அனுஷ்கா பதிவிட்ட காணொளிதான் பிரச்சனைக்குள்ளாகி உள்ளது.

அர்ஹான் சிங், கோஹ்லி மற்றும் அனுஷ்கா மீது வழக்கு தொடுத்துள்ளார். இருவரும் தன்னை அவமானப்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளார். டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அர்ஹான் சிங் பேட்டியும் அளித்துள்ளார். அதில், என்னை பொதுவில் சமூக வலைதளத்தில் கோஹ்லியும், அனுஷ்காவும் அவமானப்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தொடுத்து இருக்கிறேன். இதில் அறங்கூற்றுமன்றம்தான் தீர்ப்பளிக்க வேண்டும். இப்போதைக்கு இதற்கு மேல் இதில் கருத்து கூற விரும்பவில்லை என்றுள்ளார்.

கொட்டுகிறவரும் காரில் இருந்து கொட்டுகிறார்; திட்டுகிறவரும் காரில் இருந்து இறங்காமல் திட்டுகிறார்; நம்ம ஊரு ஆளுநர், தூய்மையாக இருந்த நாமக்கல் பேருந்து நிலையத்தில், குப்பைகளை நகராட்சி ஊழியர்களைக் கொண்டு கொட்ட வைத்து அள்ளுகிறார். வாழ்க மோடியின் தூய்மை இந்தியா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,828. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.