குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் நேரடியாக நடுவண் பாஜக அரசுக்கு எதிராகவும், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியும் போராட்டங்கள் நாட்களை தாண்டி மாதத்தை நோக்கி நகர்கின்றன. 10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் சாகீன்பாக் என்ற பகுதியில் இரண்டு மாதங்களைத் தாண்டி இடைவிடாது நடக்கும் போராட்டம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இது நடுவண் பாஜக அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுதலுக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்;;டு வருகிறது. ஆனால் இந்தப் போராட்டத்தின் நோக்கம் நடுவண் பாஜக அரசை நேரடியாக நோக்கியதாக இல்லை. அரசு அலுவலங்களுக்கு மனு எழுதும் போது, உரிய வழிமுறையாக (த்ரூ புராப்பர் சாணல்) என்று கீழிருந்து மேலாக வேண்டுகோள் விடுக்கும் வகையாக எழுதப்படுமே அதுபோல- நடுவண் அரசுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்பதாக தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்ற வகைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான சுவரொட்டிகள் காட்சியளிக்கின்றன. சிறுவர், சிறுமியர் தங்கள் கன்னங்களிலும், பெண்கள் தங்கள் கைகளிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான செய்திகளை வரைந்திருக்கிறார்கள். அதே வளைக்கரங்களில் தேசியக்கொடிகளும் அசைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் முற்போக்கு இயக்கங்களும் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். சென்னைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, தமிழக சட்டமன்றத்தில்- நடுவண் பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால் போதும். டெல்லி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, நடுவண் பாஜக அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றாக வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



