Show all

ஜியோவின் புதிய கட்டணத்திட்டம் ஆதாயம் நமக்கா! ஜியோவுக்கா

ரூ2121க்கு 336 நாட்களுக்கு அன்றாடம் 1.5 ஜி.பி. தரவு வழங்கும் புதிய கட்டணத்திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்கிறது. இதில் ஆதாயம் யாருக்கு இருக்கும்.

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அன்றாடம் 1.5 ஜி.பி. தரவு 336 நாட்களுக்கு வழங்கும் புதிய நீண்ட கால கட்டணத்திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. 

இந்தத் திட்டம் அச்சாரமாக நம்முடைய பணத்தை அள்ளிக் கொண்டு ஜியோ பயனடைவதற்கா? இல்லை நமக்கு ஏதாவது கூடுதல் ஆதாயம் வழங்குவதற்கா? என்று பார்த்தால் ஏறத்தாழ ஓராண்டு காலம் நம்மை பிடித்து வைத்துக் கொள்வதற்கும், அச்சாரமாக நம்முடைய பணத்தை அள்ளிக் கொண்டு ஜியோ பயனடைவதற்கான திட்டமே இது என கணக்கீட்டில் புரிந்து கொள்ள முடிகிறது. நடப்பு 84 நாட்கள் திட்டத்தை விட இதில் ஒரு நாளைக்கு நமது கட்டணம் வெறுமனே 29காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. 

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.2121 கட்டணத்திட்டத்தில் அன்றாடம் 1.5 ஜி.பி. தரவு, 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ எண்களுக்கு வரம்பில்லா அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 நிமிடங்கள் மட்டும் பேசிக்கொள்ளவுமான வாய்ப்புகளை  வழங்குகிறது. இத்துடன் அன்றாடம் 100 சேதி வழங்குகிறது. அடுத்த மாதத்தில் இருந்து எல்லையில்லாத சேதி சேவை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வெறுமனே 100 சேதிகளுக்கு மட்டுமான திட்டத்தில் ஏறத்தாழ ஓராண்டுகளுக்கு நம்மை பிணைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இதன் நோக்கம் தென்படுகிறது.

இதே போன்ற ஏர்டெல்லின் நீண்டகால கட்டணத்திட்டத்தில் ரூ2398க்கு 365 நாட்களுக்கு இதே சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் ரூ50 திருப்புத் தொகையாக அறிவித்துள்ளது. மற்றும் ஏர்டெல் அல்லாத எண்களுக்கும் வரம்பில்லா அழைப்பு ஏர்டெல் வழங்குகிறது. இது ஜியோவின் 12,000 நிமிடங்கள் மட்டும் பேசிக்கொள்ளவுமான வாய்ப்போடு ஒப்பிடும் போது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் ஆகும். வாடிக்கையாளர்களை அச்சம் கலந்த மரியாதையோடு நடத்துவதில் ஏர்டெல் எப்போதும் முன்னிலை வகிக்கவே செய்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.