Show all

மண் சலித்து விளையாடிய கதையானது மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை

2016 நவம்பர் 8அன்று நள்ளிரவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அரசின் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் கறுப்புப் பணம் முழுவதும் வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் வெறுமனே 8.9கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016-17 நிதியாண்டில் ரூ.7,965 கோடி ரூபாய் புதிய ரூபாய் தாள் அச்சடிப்பதற்கு செலவாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மொத்தமுள்ள 632.6 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 8.9 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது 1.4 விழுக்காடு என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016-17-ம் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக ரூபாய்தாள்கள் அச்சிடும் பணிக்கான செலவு, இருமடங்கானதாகவும் தெரிவித்துள்ளது. ரூபாய்தாள்கள் அச்சிடும் பணிக்கு கடந்த 2015-16 நிதியாண்டில் ரூ.3,421 கோடி செலவிடப்பட்டதாகவும்,

இது 2016-17 நிதியாண்டில் ரூ.7,965 கோடியாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 99 விழுக்காடு ஆயிரம் ரூபாய்தாள்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

இணையத் தள ஆர்வலர்கள் மோடியின் இந்த சிறுபிள்ளைத் தனமான திட்டத்தை எள்ளி நகையாடுகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.