கலவரம் தொடர்பான வழக்கு பஞ்சாப் ஹரியானா உயர் அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வன்முறையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஹரியானா அரசு தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தது. மேலும், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களை கண்டறியும் பணியில் அம்மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் சில சொத்துகள் கண்டறியப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய வகையில் மொத்தம் 51 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் 66வழக்குகள் பதிவு செய்துள்ளனர். குர்மித் ராம் ராகிம் சிங்கின் தேரா சச்சா சவுதா ஆசிரமம் பூரி-கொனார்ட் கடல் பகுதியில் 12 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி உள்ளது. அரியானாவில் உள்ள அவரது ஆசிரமத்தினை சோதனை செய்ததில், சொகுசான அறைகள் மற்றும் அதில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் விலையுயர்ந்தவையாக இருந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



