Show all

வரும் நாட்களில் முட்டை விலை உயரும்: நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு

நாடு முழுவதும், கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்கள், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதனால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக, பண்ணைகளில் விடப்பட்ட, ஒரு நாள் அகவை உடைய கோழிக் குஞ்சுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாக உள்ளதால், அன்றாட முட்டை உற்பத்தி குறைந்துள்ளது.

மேலும், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில், வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக, தென்மேற்கு பருவமழை பெய்தது உள்ளிட்ட காரணங்களால், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது.

அதேபோல், ஆந்திராவில் சத்துணவு முட்டை கட்டாய மெனுவில் வந்துள்ளதால், முட்டை தேவை அதிகரித்துள்ளது.

ஆனாலும் கூடுதல் முட்டை உற்பத்திக்கான முயற்சி முன்னெடுக்கப் பட்டு நடைமுறைக்கு வரும் வரை, முட்டை உற்பத்தி குறைவு எதிரொலியாக, வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளது. என்று நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தலைவர் செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.