15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பேருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து 20.கி.மீ. சென்று விட்ட நிலையில் பயணச்சீட்டு வாங்கிய பயணி ஒருவர் ரூ.220 கட்டணத்துக்கு பதில் ரூ.270 கட்டணம் கேட்டதால் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது நடத்துனர் அணைக்கரை பகுதியில் காடுவெட்டி குருமரணத்தையொட்டி அவரது ஆதரவாளர்கள் பேருந்துகளின் கண்ணாடியை உடைப்பதால் பேருந்து அணைக்கரை வழியாக செல்லாமல் மயிலாடுதுறை வழியாக சுற்றி செல்கிறது. அதற்காக ரூ.50 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பயணி இதுபற்றி பேருந்தில் ஏறும் போது ஏன் கூறவில்லை. என்னால் கூடுதல் கட்டணம் கொடுத்து வரமுடியாது. என்னை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு செல்லவேண்டும் என்று கறாராக கூறினார். எவ்வளவு கூறியும் அவர் சமாதானம் அடையாததால் அந்த பேருந்தை மீண்டும் கும்பகோணத்துக்கு ஓட்டி வந்து குறிப்பிட்ட பயணியை இறக்கி விட்டு சென்றனர். வழக்கமாக பேருந்து ஓட்டுநர் நடத்துநர்கள் பயணியை அந்த இடத்திலேயே இறக்கி விட்டு விட்டு திட்டிக் கொண்டே போவார்கள். ஆனால் இந்த ஓட்டுநரும், நடத்துநரும் பயணியின் கோரிக்கையை ஏற்று செயல்பட்டது மற்ற பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் கூடுதல் கட்டணத்தை ஏற்று கொண்ட பயணிகளுடன் அந்தப் பேருந்து மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,802.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



