Show all

கங்கை ஆற்று நீர் குடிப்பதற்கு உகந்தல்ல! கங்கை ஆற்றில் ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்கவேண்டும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கங்கை ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது தொடர்பான விவகாரம் நேற்று டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. 

உத்தரபிரதேசம் மாநிலம், ஹரிதுவாரில் இருந்து உன்னாவ் வரை செல்லும் கங்கை ஆறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கங்கையைக் கடவுளாக நினைக்கும் சில அப்பாவி மக்கள் அதில் குளித்துவிட்டு நீரைக் குடிக்கவும் செய்கின்றனர். இது மனிதர்களுக்கு மிகவும் தீங்கு விளைக்கும் எனக் கூறினர்.

சிகரெட் அட்டையில் இருக்கும் எச்சரிக்கை வாசங்களைப் போன்று கங்கை நதிக்கரையிலும் ஏன் வாசகங்கள் அமைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், கங்கை ஆற்று நீர் குடிப்பதுக்கு உகந்ததல்ல என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் கங்கை ஆற்றில் 100 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும் எனத் தேசிய கங்கைத் தூய்மை இயக்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் கங்கை ஆற்றில் எங்கெல்லாம் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது என்பதை ஆய்வு செய்து அந்த வரைப்படத்தை இரண்டு கிழமைகளுக்குள் தேசிய கங்கைத் தூய்மை இயக்கமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

இந்த ஆற்றை வைத்துதான் கங்கை காவிரி இணைப்பு அரசியல் நடந்து வந்ததா இத்தனை ஆண்டுகள். என்னே கொடுமை!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.