31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருட்-திருட்டு- திருட்டன் என்பது தான் சரியான சொல்லாக்கம். திருடன் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதை- களவுத் தொழில் புரிகிறவரை தமிழில் திருடன் என்று ஏதோ மரியாதை நிமித்தமாக சொல்வது போல் இருக்கிறதே என்று பலருக்கும் ஐயம் வருவதுண்டு. மரியாதைக்குரிய ஒரு திருடரைப் பற்றிய உண்மை நிகழ்வுதான் இது: கேரளாவில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடன், மீண்டும் நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி அளித்து இருக்கிறார். ஆலப்புழா அருகே இருக்கும் அம்பலப்புழாவில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. கருமாடி என்ற பகுதியில் உள்ள, மது குமார் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த செவ்வாய் கிழமை திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை மறந்து பூட்டாமல் சென்றுள்ளார். பின் இரவுவீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் நகை திருட்டு போய் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார். சுமார் 3 பவுன் நகை காணாமல் போய் இருக்கிறது. இதையடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறை அவர்கள் கொடுத்த புகாரின் அடைப்படையில் விசாரிக்க தொடங்கியுள்ளனர். புதன் கிழமை அவர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே, வியாழக்கிழமை அவர்கள் வீட்டின் வாசலில் காணாமல் போன நகை இருந்துள்ளது. அதில் ஒரு கடிதமும் இருந்துள்ளது. ஆதில், என்னை மன்னித்துவிடுங்கள். பெரிய பணத்தேவை இருந்ததால் இப்படி செய்துவிட்டேன். இனி இப்படி திருட மாட்டேன். எனக்கு எதிராக காவல்துறை புகார் எதுவும் அளிக்க வேண்டாம். என்று மலையாளத்தில் எழுதியுள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர், காவல்துறையில் அளித்த புகாரை திரும்ப வாங்கியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



