31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்று தன் ஆசிரியரிடம் ஒப்படைத்தார். யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது ஆசிரியர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் நடந்ததைச் சொல்லி பணத்தை ஒப்படைத்தார். காவல்துறையினர் யாசினைப் பாராட்டி யாசின் விருப்பமான ரஜினி சந்திப்பை நிறைவேற்றித் தந்தனர். காமராஜர் பிறந்த நாளில் யாசினுக்கு நமது வாழ்த்துக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,849.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



