பாஜக நடுத்தர மக்களை வாட்டி வதைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல் படுவதற்கான காரணம் வெளியாகி உள்ளது. கார்ப்பரேட் எனப்படும் பெரிய நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்றதில் பாஜகவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. பாஜக கடந்த 4 ஆண்டுகளில் 2,987 பெரிய நிறுவனங்களிடமிருந்து ரூ.705 கோடியே 81 லட்சம் நன்கொடை பெற்றுள்ளது. இரண்டு மற்றும் 3ம் இடங்கள் முறையே காங்கிரஸ் கட்சியும் ரூ.198.16 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ரூ.50.73 கோடி பிடித்துள்ளன. நான்கு மற்றும் 5ம் இடங்கள் முறையே பாமர மக்களுக்கான கட்சிகள் என்று பீற்றிக் கொள்கிற சி.பி.எம்., ரூ.1.89 கோடி, சி.பி.ஐ.,ரூ.18 லட்சம் கட்சிகள் பிடித்துள்ளன. பாஜக, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ், கட்சிகளுக்கு பெரும்பாலும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்தான் அதிக நன்கொடை தந்துள்ளன. குறிப்பாக சத்யா எலெக்டோரல் அறக்கட்டளை என்ற நிறுவனம் மட்டும் ரூ.261 கோடி நன்கொடை அளித்துள்ளது. அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை விவரங்களை, ஒவ்வொரு நிதியாண்டும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ரூ.20 ஆயிரம்வரை நன்கொடை பெற்றால், நன்கொடை அளித்தவரின் விவரங்கள் தேவையில்லை. அதற்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் எப்படி பாஜக, காங்கிரஸ், பொது உடைமை கட்சிகள் எல்லாம் பாமர மக்களுக்கு ஆதரவான கட்சிகளாக செயல்பட முடியும். இந்தியாவில் பாஜக ஆட்சி என்பது பெருநிறுவனங்களின் மறைமுக ஆட்சி என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



