Show all

மும்பை அந்தேரி கிழக்கு காவல்நிலையத்தில் பிரதமர் மோடி மீது புகார்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம வித்தால்ராவ் காலே என்பவர், மும்பை அந்தேரி கிழக்கு காவல்நிலையத்தில் பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளார்.

வழக்கறிஞர் ராம வித்தால்ராவ் காலே அளித்துள்ள புகாரில், அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரதம் என்ற இரண்டு சொற்களே நாட்டைக் குறிப்பிடும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விடுதலைநாள் உரையில் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; குற்றமாகும்.

ஹிந்துஸ்தான் என்ற பெயர் ஒரு மதத்தைக் குறிப்பிடுவது. விடுதலைநாள் உரையில் ஹிந்துஸ்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு -1 கூறியுள்ள விதிமுறைகளை மீறும் செயல் இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் புகார் மனுவை மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் வழக்கறிஞர் காலே அனுப்பியுள்ளார்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம்.

உலகம் தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.

உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.

இந்தியா குறித்து ‘நாவலந்தேயம்என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர்.

அதனாலேயே வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள்.

மற்றபடி இந்தியாவை ஹிந்தி மொழியில் பாரத் என்றே குறிப்பிடுகிறார்கள் என்பதை உலகினர் யாரும் அறிய மாட்டார்கள்.

ஹிந்துஸ்தான் என்கிற சொல்லை இந்தியாவை ஹிந்து மத நாடாக கருதியிருப்போர் மட்டும் பயன் படுத்தி வருகிறார்கள்.

ஆக பாரத், ஹிந்துஸ்தான் ஆகிய இரண்டு சொற்களுமே அதிகாரமில்லாமல் சூழ்ச்சியாக பயன்பாட்டில் உள்ள சொற்களே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.