அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி ரோமானியாவின் இரினா கேமலியா பெகு - ராலுகா ஒலரு ஜோடியை 6-4, 7-6 மற்றும் 10-3 புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது. அதே போல் ரோகன் போபண்ணா - இவான் டோடிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



