Show all

அவரும் பாஜகதான்யா! அய்யாக்கண்ணுவன் நதிமூலம் ரிஷிமூலம் தேடும் முயற்சியில் கிடைத்த தகவல்

தனியாக விவசாய சங்கத்தைத் தொடங்கும் முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இன் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கத்தில் இருந்தவர் அய்யாக்கண்ணு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் தமிழக அப்பாவி உழவர்களுடன் சென்று போராட்டம் நடத்தி, நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அய்யாக்கண்ணு, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உடன் மேற்கொண்ட சந்திப்புக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிராகத் தாமும், தமது தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க உறுப்பினர்களும் என 111 உழவர்கள் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த அவர், அவ்வாறு போட்டியிடப்போவதில்லை என்று அண்;மையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அய்யாக்கண்ணுவன் நதிமூலம் ரிஷிமூலம் தேடும் முயற்சியில் கிடைத்த தகவல்:

தனியாக விவசாய சங்கத்தைத் தொடங்கும் முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இன் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கத்தில் இருந்தவர் அய்யாக்கண்ணு என்பதும்,

மீண்டும் தனது தாய் அமைப்புடன் ஐக்கியமாவதற்கான உள்அமைப்புப் போராட்டத்தை- தெரியாத்தனமாக அப்பாவி தமிழக ஒழவர்களை பகடைக் காயாக்கி பெரிது படுத்திவிட்டார் என்றும், தாய் அமைப்பு அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டு விட்டது என்றும் இனி அவர் தமிழிசை, எச்.இராஜா, பொன்இராமச்சந்திரன் போன்ற பாணியில் மக்கள் அங்கீகாரம் இல்லாமல் கட்சியின் அரவணைப்போடு உலா வருவார் என்று அறிப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.