Show all

தான் செயலலிதா மகள் என்று இன்னொருவர் கிளம்பியிருக்கிறார்! உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவின் மகளாக தன்னை அறிவிக்கக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளார்.

செயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே பெண் ஒருவர் பதிகை செய்த மனுவை உயர் அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் இதேபோன்ற மனுவை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

மறைந்த முதல்வர் செயலலிதாவின் மகளாக தமிழ்தொடர்ஆண்டு-5082ல் (1980) பிறந்தேன். செயலலிதாவின் அத்தை செயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். செயலலிதாவிற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் தான் இதை வெளியே சொல்லவில்லை. எனது வளர்ப்புத் தாயான சைலஜாவும், வளர்ப்புத் தந்தையான சாரதியும் இறந்துவிட்டனர்.

நான் செயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க அவரது உடலைத் தோண்டி எடுத்து மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை நடத்த வேண்டும். வைணவ ஐயங்கார் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை. எனவே, அந்த முறையில் அவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என அந்த மனுவில் அம்ருதா கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (திங்கள்) உச்ச அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,619

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.