Show all

குஜராத் தேர்தல் களத்தில் நாறுகிறது பாஜக உட்கட்சி சண்டை

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரபாத்சின் சௌகானின் 2வது மனைவி ரங்கேஸ்வரியின் சவால் பேச்சு தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது.

தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு தரப்பட்டுள்ள தனது வளர்ப்பு மகனின் மனைவிக்கு அவர் நேரடியாக சவால் விட்டுள்ளார்.

மேலும் பிரபாத்சின் சௌகானின் முதல் மனைவியின் மகனுக்கும் அவர் உங்க அம்மாவிடம் பால் குடிச்சிருந்தா என்னோடு மோதிப் பார் என்றும் சவால் விட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு உட்கட்சி மோதலை சந்தித்து வருகிறது பாஜக.

பிரபாத்சின் சௌகான் தனது 2வது மனைவி ரங்கேஸ்வரிக்கு காலோல் தொகுதியில் வேட்பாளர் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் கட்சி மேலிடம் அதை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக பிரபாத்சின்னின் முதல் மனைவிக்குப் பிறந்த பிரவீன்சின் சௌகாவின் மனைவி சுமனுக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுத்து விட்டது.

இதனால் பிரபாத்தும், ரங்கேஸ்வரியும் கடும் கோபமடைந்துள்ளனர். ரங்கேஸ்வரி தனக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து ரங்கேஸ்வரி சௌகான் முகநூலில் காட்டமாக எழுதியுள்ளார்.

அதில் சாராய வாசனையே இல்லாத குஜராத்தில் கள்ளச்சாராயத்தை விற்றுப் பிழைத்து வருபவர்கள் பிரவீனும், அவரது மனைவி சுமனும் என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

பிரவீனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீ உண்மையிலேயே உன் அம்மாவிடம் பால் குடித்திருந்தால், காலோல் தொகுதியில் மோதிப் பார். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என்றும் ஆவேசம் காட்டியுள்ளார் ரங்கேஸ்வரி.

பிரவீன் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. அவரது மனைவி கட்சி தாவி. முன்பு காங்கிரஸில் இருந்தார். இப்போது பாஜக வந்துள்ளார். வந்ததுமே வேட்பாளர் வாய்ப்பு வாங்கியுள்ளார். இவர்கள் எப்படி மக்களை மதிப்பார்கள் என்றும் கேட்டுள்ளார் ரங்கேஸ்வரி.

வெற்றுச் சவடால் மோடி என்ன செய்யப் போகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,619

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.