11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேசிய சட்ட நாளை முன்னிட்டு, உச்ச அறங்கூற்றுமன்றம் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர் ‘நிர்வாகம், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை விவகாரங்களில் அறங்கூற்றுவர்கள் தலையிடக் கூடாது’ என்று நடுவண் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் பேசிய உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, ‘தனிமனித உரிமைகளை (அரசு) ஆக்கிரமித்தால், அந்த வேளையில் மக்கள் பக்கம்தான் அறங்கூற்றுத்துறை நிற்கும். அறங்கூற்றுத்துறை தலையிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். அவர் பேசும்போது, ‘அரசுக்கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிடலாம். ஆனால், நிர்வாகத்தைத் தன் கைகளில் எடுத்துக் கூடாது’ என்றார். இந்நிலையில், 2-வது நாளாக நேற்று தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் நடுவண் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, ‘ ‘அறங்கூற்றுத்துறைக்கு சுதந்திரம் எவ்வளவு தலையாயதோ அதேபோல்தான் அறங்கூற்றுத்துறைக்கு நேர்மையும் தலையாயது. சிக்கலைத் தவிர்க்க அறங்கூற்றுத்துறை, நிர்வாகம், நாடாளுமன்ற சட்டப்பேரவைக்கு இடையில் சமநிலையை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்’ என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,619
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



