பதினேழாவது இந்திய மக்களவைத் தேர்தல், பல்வேறு அரிபரிகளோடும், குழப்பங்களோடும், குற்றச்சாட்டுகளோடும் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் எடுத்து கொண்ட அவகாசமும் முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருக்கின்றன. மாலை 4.00 மணி நிலவரம்! 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் இடைத் தேர்தலைப் பொறுத்த வரை திமுக பனிரெண்டு தொகுதிகளிலும் அதிமுக ஒன்பது தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன. ஆம்பூர் தொகுதியில் திமுக வென்றிருக்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. பாமக ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. பன்னீர் செல்வத்தின் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் நான்கு சுற்றுகளுக்கு மேல் வாக்குகள் எண்ணப் படவில்லை. அங்கு அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டும் முடிவுகள் தெரிவிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. மதவாதம் பிடிக்காத, கார்பரேட்டுகளிடம் தங்களிடம் ஒப்படைக்காமல் பெரு வாரியானவர் தாங்களே முதலாளியாக இருக்கிற நிலையில், தமிழக மக்கள் மோடியின் ஆட்சியை தங்களுடைய ஆட்சியாக கொண்டாடுவதற்கு ஏதுக்கள் எதுவும் இல்லை என்பதை பதிவு செய்யும் முகமாக பாஜகவை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழக மக்கள் ஒட்டு மொத்த இந்தியாவிற்கு தெரிவிக்க விரும்புவது: நடுவண் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்தின் மீது அமெரிக்க டைம் இதழ் கணித்திருப்பது போல பிரித்தாளும் அதிகாரத்தை திணிக்காதீர்கள். எங்களுக்கான ஆட்சியை நாங்கள் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது என்பதுதான். ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஜெகன் ஆட்சி அமைக்க இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் முன்னிலை இந்தியா: காங்கிரஸ்-94 பாஜக-344 திரிணமுல் காங்கிரஸ்-22 மற்றவை- 82 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,161.
நாடாளுமன்றத் தேர்தலில்: வட மாநிலங்களில் மோடியின் ஆட்சியை தங்களுடைய ஆட்சியாகக் கருதி மக்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மோடியின் மதவாதம் பிடித்திருக்கிறது. வடமாநில மக்கள் தங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையளித்து விட்டு பிழைப்பு நடத்துவதை விரும்புகிறார்கள். அதனுடன் தமிழக விரோத நடவடிக்கை பேணும் கர்நாடகம் மட்டும் தென்னகப் பட்டியலில் இருந்து விலகி அந்த மோடி ஆதரவு அணியில் கை கோர்த்திருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



