பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழக மக்கள் வருந்துவார்கள். தமிழக மக்கள் தவறு செய்து விட்டார்கள். என்று தமிழக மக்களை குற்றவாளிக் ஏற்றினார் தமிழிசை. 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வடஇந்திய மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். தனிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது. தமிழர்களின் கல்வி, வேலைகள், வேளாண்மை, தொழில் வளமை, பொருளாதாரம் அனைத்தையும் பறித்த மோடியின் பிரித்தாளும் ஆட்சியை விரும்பாத தமிழகத்தில்- பாஜக சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன். இதழியலாளர்கள் முன்னிலையில் தமிழிசை, பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதால் தொங்கு நாடாளுமன்றம் அல்ல, தங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. தூத்துக்குடியை பொறுத்தமட்டில், இத்தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதற்காக விரிவான பட்டியலைக் கூட நான் தயாரித்து வைத்துள்ளேன். நான் அங்கிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், என்னால் முடிந்த அனைத்து விசயங்களையும் செய்வேன். தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். அங்கு தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பதுதான் எனது கருத்து. தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பாஜக வலுப்பெற வேண்டும். வருங்காலத்திலாவது மக்கள் எங்கள் நல்ல தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். தமிழிசை! மக்களாட்சியில் அரசு என்பது மக்களுக்கான வேலைகளைச் செய்கிற கௌரவமான வேலைக்காரன். வெறுமனே சௌக்கிதார் என்று பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டால் போதாது. தொகுதிக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்ற உறுப்பினர் தொகுதிக்காக வேலை செய்ய வேண்டும். மாநிலத்தின் பேராளர்களாக பாராளுமன்றத்திற்கு செல்கிறவர்கள் அந்த மாநில மக்களுக்காக உரிமைகளைக் கேட்க வேண்டிய பணியாளர்கள். என்னுடைய வரிப்பணத்தில் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவர் ஆவதற்கு நீ வைக்கிற நீட் தேர்வில் தமிழன் தேற வேண்டும். அந்த வகையில் என்னை அடிமையாக்குவதற்கு உன்னைத் தேர்ந்தெடுக்காத தமிழன் எதற்காக வருத்தப் படுவான்? என் வீட்டில் திருடி அடுத்தவனுக்கு ஆதாயம் செய்வாய் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு உன்னை ஆளும் பணிக்குத் தேர்ந்தெடுக்காத என் தமிழன் எப்படி குற்றவாளியாவன்? உனக்கு தமிழகம் பிடிக்க வில்லை யென்றால், உனக்கு விருப்பமான மாநிலத்தில் சென்று நீ பிழைப்பு நடத்த யார் உன்னைத் தடுத்தார்கள். என்னுடைய மொழி அழிக்கப்படும், என்னுடைய கல்வி களவாடப் படும், என்னுடைய மாநில வேலைகள் அனைத்தும் பறித்துக் கொள்ளபடும், என்னுடைய அதிகாரம் கொள்ளை போகும் என்று தெரிந்தே உனக்கு வாக்களிக்க வில்லை. வருத்தப் படவேண்டியது தமிழன் அல்ல நீதான். முதலில் உன் பெயரை மாற்று; ஹிந்திகத்தல்காரி, ஹிந்துத்துவாகத்தல்காரி என்று பெயர் வைத்துக் கொள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,161.
பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழக மக்கள் வருந்துவார்கள். தமிழக மக்கள தவறு செய்து விட்டார்கள். என்று தமிழக மக்களை குற்றவாளிக் ஏற்றினார் தமிழிசை.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
என்பார் திருவள்ளுவர். நல்லமனிதர் உன் அப்பா! அவரின் பெயரைக் கெடுக்காதே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



