பதினேழாவது இந்திய மக்களவைத் தேர்தல், பல்வேறு அரிபரிகளோடும், குழப்பங்களோடும், குற்றச்சாட்டுகளோடும் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் எடுத்து கொண்ட அவகாசமும் முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 9.00 மணி நிலவரம்! 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் இடைத் தேர்தலைப் பொறுத்த வரை திமுக அனைத்து தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை கூட திமுகவே அனைத்து தொகுதிகளிலும் முன்னணி வகித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல், தென் மாநிலங்களில்: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னணி. கர்நாடகவில் பாஜக முன்னிலை. கேரளாவில் இன்னும் முடிவேதும் வெளியாகவில்லை. வட மாநிலங்கள் டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலை. மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,161.
இடைத்தேர்தல் முன்னிலை தமிழகம்: திமுக- 21. அதிமுக-2
நாடாளுமன்றத் தேர்தல் முன்னிலை இந்தியா: காங்கிரஸ்-86 பாஜக-200 திரிணமுல் காங்கிரஸ்-15 மற்றவை- 63
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



