Show all

வாழ்த்துக்கள் ஜெகன்! ஆந்திராவில் மதுவிலக்கை அமுல்படுத்தும் முயற்சியில் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, முழு மதுவிலக்கை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இவர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளார். 

இதனால், நடப்பு ஆண்டிலேயே அம்மாநிலத்தின் மது கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது. முழு மதுவிலக்கு இலக்கை எட்டும் வரை ஒவ்வொரு ஆண்டும் கொள்கை மாற்றி அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஐந்து மின்மினி விடுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் மது விநியோகிக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைகளை குறைப்பது, விலையை அதிகரிப்பது போன்ற அம்சங்களும் புதிய கொள்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,165.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.