காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்களின் உதவியுடன் தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. 41மணி நேரம் கடந்தும் இன்னும் துப்பு கிடைக்கவில்லை. 18இராணுவத்தினரின் கதி? 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முந்தாநாள் பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆம் நமது இந்தியாவில்தான்! அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர். உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தின் பாதையில் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும் மோசமான வானிலை மற்றும் மலைப்பாங்கான பகுதி ஆகிய காரணங்களால் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்துள்ளது. இஸ்ரோவின் ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் மூலமாக விமானத்தை தேடும்பணியை முடக்கிவிட்டுள்ளது. இவ்வகை செயற்கைக்கோள்கள் மோசமான வானிலையிலும் ரேடார் உதவியுடன் அதிநவீன புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 41மணி நேரம் கடந்தும் இன்னும் துப்பு கிடைக்கவில்லை. 18இராணுவத்தினரின் கதி? கடந்த 07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5118 வெள்ளிக் கிழமையன்று (22.07.2016) காலையில் ஏ.என். 32 ரக விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட்பிளேருக்கு புறப்பட்டது. 29 பேருடன் சென்ற அந்த விமானம் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே பறந்தபோது மாயமானது. இதைத்தொடர்ந்து விமானப்படை விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் கடலில் தேடும் பணிகள் நடந்தன. சுமார் 2 மாதங்கள் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே இந்த பணிகளை நிறுத்துவதாக விமானப்படை அறிவித்தது. அந்த விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் நிலை பற்றிய விவரங்கள் இன்றுவரை மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,174.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



