Show all

பாடப் புத்தகத்தில் பாரதியாருக்கு காவி தலைப்பாகை! வைகோ கண்டனம்

பனிரெண்டாம்  வகுப்புக்கான, தமிழ்ப் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளை தலைப்பாகைக்கு பதிலாக, காவி நிற தலைப்பாகை வரையப் பட்டிருப்பதற்கு வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பனிரெண்டாம்  வகுப்புக்கான, தமிழ்ப் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளை தலைப்பாகைக்கு பதிலாக, காவி நிற தலைப்பாகை வரையப் பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. 

இது குறித்து மதிமுக பொதுச்செயலர், வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்: பாரதியார் தலைப்பாகையை காவி நிறத்தில் வரைந்திருப்பது, இயல்பாக நடந்ததாக தெரியவில்லை; திட்டமிட்டே வரைந்துள்ளனர். அட்டையில் தான் இந்த மாற்றமா அல்லது உள்ளே இருக்கிற பொருட்களிலும் மறைமுக காவி திணிப்பு இருக்கிறதா என்பதை, கல்வியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். 

நடுவண் அரசு பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்றி எழுதி வருகின்றனர். இந்திய விடுதலை போராட்ட வரலாற்றை திருத்தி எழுதி வருகின்றனர். இந்தியாவில் பலமொழிகள், பல கலாச்சாரங்கள் இருந்து வருவதை முற்றாக மறைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு மட்டுமே இருந்து வருவது போல வரலாற்றை உருவாக்க முனைகிற, ஹிந்துத்துவா சக்திகளின் பின்புலத்தில் இயங்குகிற மோடி அரசு, முந்தைய ஐந்தாண்டுகளில், கல்வித் துறையில் ஏராளமான தகிடுதத்தங்களை செய்து  விட்டது. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்று, வைகோ அவர்கள் எச்சரித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,174.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.