Show all

குடமுழுக்கு தமிழிலும் சமஸ்கிருதத்திலும் முன்னெடுக்கப்படும்! பெரிய மாற்றமில்லை தமிழக அரசு தெரிவித்து வந்ததுதான். வழக்கு முடித்துவைப்பு

தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று கூறியிருக்கும் அறங்கூற்றுவர்கள் அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியின்படி, எந்தக் குளறுபடியும் செய்யாமல் தமிழில் குடமுழுக்கு முன்னெடுக்கப்பட்டதை உறுதி செய்து  நான்கு கிழமையில் அறிக்கை பதிகை செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அறநிலையத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று கூறியிருக்கும் அறங்கூற்றுவர்கள் அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியின்படி, எந்தக் குளறுபடியும் செய்யாமல் தமிழில் குடமுழுக்கு முன்னெடுக்கப்பட்டதை உறுதி செய்து  நான்கு கிழமையில் அறிக்கை பதிகை செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளது 22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (05.02.2020) குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை பெரியகோயில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனுக்கள் பதிகை செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கை தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் உறுதிமொழிஆவணமாக பதிகை செய்ய அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு அறங்கூற்றுவர்கள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுதாரர்கள் தரப்பு- தமிழில் நடத்தப்படும் என கூறிவிட்டு, கருவறைகளில் அவ்வாறு தமிழ் மொழியில் நடத்தப் போவதில்லை என கூறப்படுகிறது. எனவே, ஓய்வு பெற்ற உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தலைமையில் குடமுழுக்கை நடத்தி கண்காணிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை பதிவு செய்த அறங்கூற்றுவர்கள், அறநிலையத் துறை தமிழில் நடத்துவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளதால், ஓய்வுப் பெற்ற உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் நியமனத்திற்கு தேவைஎழவில்லை என தெரிவித்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்டு, மனு மீதான தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுக்கள் மீது இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, தஞ்சை பெரிய  கோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்க நடத்த அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்தும், தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

கஷ்மீர் மக்களுக்கு ஒப்பந்தமாக வழங்கப்பட்டிருந்த காஷ்மீர் சிறப்புத்தகுதியை- நடுவண் பாஜக அரசு எளிதாக விலக்கிக் கொண்டுவிட்டது. ஆனால் தமிழ்மன்னர்கள், தமிழ்க்கோயில்களில் சமஸ்கிருதத்தில் அருச்சனை, மந்திரம், குடமுழுக்கு அகியவற்றை செய்ய, பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பனியர்களுக்கு இலவசமாக வழங்கியிருந்த உரிமையை- தமிழக அதிமுக அரசால் விலக்கிக் கொள்ள முடியவில்லை. இரண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான். கருவூரார் சித்தர் பெருஞ்சீற்றப்பதிவு (சாபம்) நீங்கிடும் வாய்ப்பை உருவாக்கிடும் தலைமை எதுவும் தமிழர்களுக்கு இன்னும் அமையவில்லை. காத்திருப்போம்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.