வட இந்திய அரசியலில் அசிங்கங்கள் அரங்கேறி நாகரீக இந்தியாதானா இது? என்று நாணமடையச் செய்கிறது. இன்று, டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்த வாகனத்தில் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவரை ஒரு போக்கிரி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சரியாக இரண்டு கிழமைகளுக்கு முன்னால் குஜராத் மாநிலம், சுரேந்தர் நகரில் தேர்தல் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்த ஹர்திக் படேலை, மேடையேறி ஒருவன், திடீரென அவர் கன்னத்தில் அறைந்து தாக்கினான். அரசியல் அநாகரீகத்தின் அந்தப் பரபரப்பே அடங்காத நிலையில், -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,142.
இன்று, டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்த வாகனத்தில் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவரை ஒரு போக்கிரி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று மோதி நகரில் திறந்த வாகனத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊர்வலமாக சென்றார். அப்போது, திடீரென ஒரு நபர் வாகனத்தின் மேலேறி அரவிந்த் கெஜ்ரிவாலை பலமாக தாக்கினான்.
எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலால், அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். கூடியிருந்த தொண்டர்கள் அந்த போக்கிரி இளைஞனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.