சில ஊடகங்கள்! பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதாக, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்வைத்து வருகின்றன. இந்தக் கணிப்புகளை காங்கிரஸ் கட்சி முற்றிலும் நிராகரித்துள்ளது. 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் 542 தொகுதிகளில் (வேலூர் தவிர) மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை: பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதாக முன்வைத்து வருகின்றன சில ஊடகங்கள். இந்தக் கணிப்புகளை காங்கிரஸ் கட்சி முற்றிலும் நிராகரித்துள்ள போதிலும், ஒருவேளை பாஜக அதிக இடங்களில் வென்றால், அதனை வீழ்த்த எந்த சமரச திட்டத்தையும் ஏற்க காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. இதன்படி பாஜக ஒருவேளை கணிப்புகளின் படி அதிக இடங்களை வென்றால் ஒன்றும் செய்யமுடியாது. அந்தகட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க ஒன்றுமே செய்ய முடியாது என காங்கிரஸ் நம்புகிறது. பாஜக பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரசும் 100 இடங்கள் வரையே பெறும் என்ற சூழ்நிலை வந்தால், தலைமை அமைச்சர் வேட்பாளராக ராகுலை நிறுத்துவது கடினம் என்பதால் பலமான எதிர்க்கட்சியில் ஒருவரை தலைமைஅமைச்சராக அங்கீகரிக்க காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் தலைமைஅமைச்சர் பதவி ஆசையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரு சமரச திட்டத்தை ஏற்க வைக்க முடியும் என்றும், பாஜக ஆட்சிக்கு வருவதைக் கர்நாடகா பாணியில் தடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் பலமாக நம்புகிறது. எனினும் தேர்தல் முடிவு வெளியாகும் போது, தங்கள் கட்சியே அதிக இடங்களில் வெல்லும் என்றும், ராகுல் தான் தலைமைஅமைச்சர் ஆவார் என்றும் காங்கிரஸ் ஆழமாக நம்பி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



