Show all

அதிர்ச்சியையும், திகிலையும் உருவாக்கும் மழையின் கொடுமை! கொண்டானாஅள்ளி என்ற கிராமமே மழையில் மூழ்கி விட்டதாம்

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தை போன்று இங்கும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடகு மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இயக்கமின்றி காணப்படுகிறது. மடிகேரி நகரில் நிலச்சரிவால் ஒரு கட்டடம் உடைந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் குடகு மாவட்டம், மடிகேரி தாலுக்காவில் காண்டானாஅள்ளி என்ற கிராமமே நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.

இது சிட்டிசன் படத்தில் மழை, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு தமிழக வரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமமே இல்லாமல் இருக்கும். அது போன்று இன்று கர்நாடக மாநில எல்லையில் கொண்டானாஅள்ளி என்ற கிராமத்திற்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,883.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.