Show all

எடப்பாடி அரசே காரணமாக இருக்க முடியும்! வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் 14வது இடத்தில் சென்னை. மோடி அரசே காரணம், திருப்பூர் 29ல்

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மஹாராஷ்டிராவில் உள்ள, புனே, நவி மும்பை மற்றும் மும்பை ஆகிய நகரங்கள், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நடுவண் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில்.

நாட்டின் முதன்மை நகரங்களில் நிலவும், நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும்,  எளிதான வாழ்க்கை குறியீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலை, நடுவண் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று வெளியிட்டார்.

அதில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரம் முதலிடம் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து, அதே மாநிலத்தை சேர்ந்த, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள், மக்கள் எளிதாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன. 

அதற்கு அடுத்தபடியாக, ஆந்திர மாநிலம் திருப்பதி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர், மகாராட்டிர மாநிலம் தானே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 

இந்த பட்டியலில், தமிழக நகரங்கள் முறையே, திருச்சி, 12; கோவை, 25; ஈரோடு, 26; மதுரை, 28 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. இதெல்லாம் சரிதான் ; இந்த நகரஙகளில் கொஞ்சம் பாதிப்புகைளத் தாண்டி வாழ்வதற்கு சொந்த வீடு, கட்டாயம், தொழில் செய்வதற்கு நிலம் இருந்தால் மட்டுமே குப்பை கொட்ட முடியும் என்பது உண்மைதான். இரண்டும் இல்லாமல் நல்ல வாழ்க்னை வாழ்வதென்றால் அரசு வேலையில் இருக்க வேண்டும். 

சென்னைக்கு 14 இடம் என்பதை செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை ; சென்னை பின்னுக்குச் சென்றதற்கு எடப்பாடி அரசுதான் காரணமாக இருக்க முடியும். அம்மா உணவகமும், பேருந்துகளில் நாள் முழுவதற்கும் 50ரூபாய் பயணச்சீட்டும் வேலைக்குப் போகிறவர்களுக்கு பெரிய வரமாக இருந்தது. அதை நிலைநிறுத்தாமையே, சென்னை ஏழெட்டு இடங்கள் பின்னுக்குத் தள்ளிப் போயிருப்பதன் காரணமாகியிருக்க முடியும்.

திருப்பூர், 29வது இடத்தைப் பிடித்துள்ளதற்கு, மோடி அரசின், பணமதிப்பிழப்பு நடிவடிக்கையும், சரக்கு சேவை வரியும் மட்டுமே முழுக்க முழுக்க காரணமாக இருக்க முடியும். 

இந்த பட்டியலில், நாட்டின் தலைநகர், புதுடில்லி, 65 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம், 111 நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா பங்கேற்கவில்லை. ஜம்மு - காஷ்மீர்மாநிலத்தில் உள்ள, ஸ்ரீநகர், 100வது இடத்திலும், ஜம்மு, 95வது இடத்திலும் உள்ளன. உ.பி., மாநிலம் ராம்பூர், இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,879.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.