Show all

எண்ணிம இந்தியாவிற்கு நேர்ந்த அவலம்! விடுதலை நாளுக்கு முந்தைய நாளில்; புனே வங்கிக் கிளையில் ரூ.94 கோடி மாயம்

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாட்டின் முதன்மை நகரங்களில் நிலவும், நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, எளிதான வாழ்க்கை குறியீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலை, நடுவண் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று வெளியிட்டார். அதில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

அந்தப் புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் தலைமை கிளையில் சர்வர் இரண்டு முறை ஹேக்கிங் செய்யப்பட்டு ரூ.94 கோடி இந்தியா மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என அடையாளம் தெரியாத நபருக்கு எதிராகவும், ஹாங்காங்கை தலைமையமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திற்கு எதிராகவும் வங்கி புகார் கொடுத்துள்ளது.

புனே காவல் நிலையத்தில் வங்கி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் வங்கியின் சர்வர்கள் சனிக்கிழமை  மற்றும் திங்கள் கிழமைகளில் இருமுறை ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுழியம் குற்றவாளிகள் சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் 15,000 பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். ஆதாய அட்டை மூலம் மேற்கொள்ளப்பட்ட 14,849 பரிவர்த்தனைகளில் ரூ.80.5 கோடி வெளிநாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிவிப்ட் பரிவர்த்தனையின் முறையில் ரூ. 13.92 கோடி மாற்றப்பட்டுள்ளது. திருடப்பட்ட தொகையில் ரூ. 78 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது, இந்தியாவில் 2.5 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திங்கள் கிழமை நண்பகல் 11 மணியளவில் மீண்டும் ஹேக்கர்கள் வங்கியின் சர்வரை ஹேக் செய்துள்ளனர். அப்போது ரூ.13.92 கோடி ஹாங்காங்கில் உள்ள ஹாங்சாங் வங்கியில் உள்ள ஏஎல்எம் டிரெடிங் லிமிடெட் நிறுவன கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏடிஎம் சுவிட்ச் சர்வரில் மால்வேர் தாக்குதலை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு பணம் திருடப்பட்டுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் பலரின் கார்டு தகவல்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளார்கள் எனறும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எண்ணிம இந்தியா என்று மோடி அரசு, மக்கள் அதிகாரமான பணத்தை செல்லாததாக்கி, அடிமை அடையாளம் ஆதாரை அதில் இணை, இதில் இணை என்று அலைகழிக்கப் பட்டு வரும் நிலையில்;, இது போன்ற நிகழ்வுகள் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,879.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.