11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை செம்மொழி பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம் அடைந்தன. ஏழு ஆண்டுளுக்கு முன்பு கதீட்ரல் சாலையில் திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவுக்கு நாள்தோறும் எராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில், நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தததால், பூங்காவின் வலது பக்க சுவர் லேசாக தளர்ந்துள்ளது. இன்று காலை திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகே நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்கள் சேதம் அடைந்தன. நல்லவேளையாக அந்த நேரத்தில் பொது மக்கள் யாரும் அங்கு இல்லாததால் சேதம் தவிக்கப்பட்டது. தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டு தமிழின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டிய, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தான் ஏனோதானோவென்று கிடப்பில் போடப் பட்டுக் கிடக்கிறது என்றால், செம்மொழிப் பூங்காவையும் வலிமையாக கட்ட முடியாதா என்ன? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,619
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



