Show all

பங்களா என்று பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது! கிழக்கு வங்கம் ஒன்று இல்லாத போது மேற்கு வங்கம் பெயர் எதற்கு?

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருந்தபோது, வங்காள தேசம், கிழக்கில் அமைந்தது கிழக்கு வங்காளம் என்றும், மேற்கில் அமைந்தது மேற்கு வங்கம் என்றும் அழைக்கப் பட்டது.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, முகமதியர்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு வங்காளமும், தற்போதைய பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் இரண்டு பகுதிகள் கொண்ட ஒரே தனி நாடாக இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. நாற்பத்தி யேழு ஆண்டுகளுக்கு முன்பு, மொழி அடிப்படையாக உருது மொழி நாடான பாகிஸ்தானிலிருந்து வங்காள மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பெற்று பங்களாதேசம் என்ற புது நாடாக உருவானது. இதில் இந்திரா காந்தி அவர்களின் பங்களிப்பு பெரும்;பகுதியாகும்.

இதனடிப்படையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு தமிழிழமும் பெற்றுத் தந்து விடுவார்கள் இந்திரா காந்தி, என்று உலகத் தமிழர்கள் பெரிதும் எதிர் நோக்கினார்கள். அதற்கான முயற்சியை இந்திரா காந்தி அவர்களும் முன்னெடுக்கத்தான் செய்தார்கள். இந்தியாவில் நிருவாகத்தில் இருக்கும் தமிழர் விரோத சக்திகள் இந்திரா அவர்களை முடித்தது.

இந்திராவிற்குப் பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையை நிருவகிக்கும் பொறுப்பை தமிழர் விரோத சக்திகள் கைப்பற்றி ஒரே கல்லில்; அடித்த இரண்டு மாங்காய்கள் ஒன்று ராஜிவ்கொலை இரண்டு தமிழீழத்திற்கு சாவுமணி. என்று தமது ராஜிவ் காந்தி கொலைக்கான காரணம் குறித்த நூலில் தெளிவு படுத்துகிறார் திருச்சி வேலுச்சாமி அவர்கள்.

தற்போது இருப்பது ஒரே வங்கம் தான் என்ற நிலையில், மேற்கு வங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வங்காளிகளிடம் எழுந்தது. கிழக்கு வங்கம் என்ற ஒரு மாநிலம் இல்லாத போது மேற்கு வங்கத்திற்கான தேவை என்ன என்ற நியாயமான கோரிக்கை அது.

தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்திற்கான புதிய பெயரை முன்மொழிந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆங்கிலத்தில் பெங்கால் எனவும், வங்கமொழியில் பங்களா எனவும், ஹிந்தியில் பங்காள் எனவும் மாநிலத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்படி மூன்று மொழிகளில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடுவது சாத்தியமில்லை என நடுவண் உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, திருத்தப்பட்டு புதிய தீர்மானத்தை மேற்கு வங்க சட்டமன்றத்தில் இன்று அரசு பதிகை செய்தது. இந்த தீர்மானத்தின்படி, பங்களா என மேற்கு வங்க மாநிலம் அழைக்கப்படும். தீர்மானம், நடுவண் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், மேற்கு வங்கம் பங்களா என அழைக்கப்படும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,860.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.