Show all

இதழியலாளர்களைக் கிச்சுகிச்சு மூட்டிய ராகுல்காந்தி!

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நடுவண் அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடைபெற்ற விவாதத்தின் மீது ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவர் பேசி முடித்தவுடன் தலைமைஅமைச்சர் மோடியை கட்டிபிடித்தார். 

இதுகுறித்து பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு விவாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த ராகுல் கூறுகையில் நான் தலைமைஅமைச்சரைக் கட்டிப் பிடித்தது இந்தளவுக்கு வேலை செய்யும் என்று பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

ஏனென்றால் நான் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கடந்து செல்லும் போது அவர்கள் இரு அடி தள்ளியே நிற்கிறார்கள். அதை பார்க்கும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மையம் கட்டிப்பிடித்து விடுவார் என்ற பொருளை நமக்கு கொடுக்கிறது என்றார் ராகுல். இதை கேட்டவுடன் இதழியலாளர்கள் குபீரென்று சிரித்து விட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,860.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.