அலகாபாத் உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ரங்நாத் பாண்டே மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் அறங்கூற்றுவர்கள் நியமனத்தில் சாதியும், ஆதிக்கக் குடும்பமும் அங்கம் வகிக்கின்றன! ஏன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அலகாபாத் உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ரங்நாத் பாண்டே அவர்கள் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: உயர் அறங்கூற்றுமன்றம் மற்றும் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர்களை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல உயர்அறங்கூற்றுமன்றம் மற்றும் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் அடுத்த அறங்கூற்றுவர் நியமிப்பதில் அறங்கூற்றுவர் உறவினர்களுக்கு தான் என்பது உறுதி செய்யப்படுகிறது. ‘உயர் அறங்கூற்றுமன்றம் மற்றும் உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்களைத் தேர்ந்தெடுப்பது, பூட்டிய அறைக்குள் தேநீர் அருந்திக் கொண்டே மூத்த அறங்கூற்றுவர்களுக்கு பிடித்த மற்றும் சாதகமாக இருக்கும் அறங்கூற்றுவர்கள் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுமுறை கமுக்கமாக நடைபெறுகிறது. அதன் பிறகு தான் அவர்கள் அறங்கூற்றுவர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும் அறங்கூற்றுத்துறையில் தனது 34 ஆண்டு அனுபவத்தில், தகுதி இல்லாதவர்கள் பலர் அறங்கூற்றுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,203.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



