கடந்த இரண்டு நாட்களாக கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிரடி போட்டியாளர் வனிதா, அவரின் முன்னாள் கணவர் புகாரின் பேரில் கைதாவார் என்று பரபரப்பு கிளப்பப் பட்டு வந்தது. வனிதாமகள் அம்மாவுடன் இருப்பதாக சம்மதித்த நிலையில் வனிதா கைது இல்லை என்றானது. இந்த நிலையில் மகளைக் கட்டாயம் தானே நேரடியாக பார்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலில் மகளா? பிக்பாசா? என்ற அறநெருக்கடியில் சிக்கியுள்ளார் வனிதா. 19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி விளங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வனிதா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். வனிதா மீது அவரது முன்னாள் கணவர், தனது மகளை கடத்தியதாக புகார் அளித்திருந்த நிலையில், மகள் யாரிடம் இருக்கு விரும்புகிறாரோ அவரிடம் தான் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனிதாவின் மகள், அம்மாவுடன் இருப்பதற்கு தான் விருப்பம் என்று கூறியதால், குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு வனிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து மகளை யார் கவனிப்பது என்று முன்னால் கணவர் கேள்வி எழுப்ப. தான் வீட்டை விட்டு வெளியே வர தயார் என்று வனிதா கூறியுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா தொடரமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,203.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



