தேர்தலுக்காக, 2,000 ரூபாய் தாள்களை, பெரிய கட்சிகள் பதுக்கி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே, புழக்கத்தில் இருந்து, 2,000 ரூபாய் தாள்கள், திடீரென மாயமாகி உள்ளதாக, சூசகமான தகவல் கசிகிறது. 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களின் அதிகாரமான ரூபாய்தாள்! மோடி அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, புதிய 2,000, 500 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. முதலில், 2,000 ரூபாய் தாள்கள் புழக்கத்துக்கு வந்தபோது, அதற்கு சில்லரை கிடைக்க, மிகுந்த சிரமம் ஏற்பட்டது. பின், 500 ரூபாய் தாள்கள், புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், அண்மைக் காலமாக, 2,000 ரூபாய் தாள்கள், புழக்கத்தில் இருந்து மறைந்து உள்ளன. அவற்றைப் பார்க்கவே முடியவில்லை என, கூறப்படுகிறது. தற்போது கடைக்கு வருபவர்களும் 2000 ரூபாய்தாள் எடுத்து வருவதில்லை. வங்கிகளின், பணம் வழங்கும் இயந்திரங்களிலும் 500, 200, 100 ரூபாய் தாள்கள் மட்டுமே கிடைக்கின்றன. இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு, 500, 200, 100 ரூபாய் தாள்கள் தாம் வருகின்றன. பணம் செலுத்த வருபவர்களும், 2,000 ரூபாய் தாள்களைச் செலுத்துவதில்லை. சில மாதங்களுக்கு முன், 2,000 ரூபாய்தாள் தட்டுப்பாடு, அதிகளவில் இருந்தது. தற்போது, 2,000 தாள்கள் கிடைப்பதே இல்லை. இதனால், பணம்வழங்கும் இயந்திரங்களில், 500 ரூபாய் தாள்கள் மட்டுமே வைக்கப்படுகின்றன. இவ்வாறு வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர் கசிவுத் தகவல் உண்மைதான் என்பது போல. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,106.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.