Show all

இறுதி தீர்ப்பு! சரவணபவன் உணவக உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை. சரணடைய 100 நாட்கள் கெடு

சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சஅறங்கூற்றுமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தோடு, சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்தாதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை பூந்தமல்லி அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதோடு, கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. 

இதை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்: ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டையாக அதிகரித்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், அந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு பதிகை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ராஜகோபாலுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த ஆயுள் தண்டையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச அறங்கூற்றுமன்றம்.

அதோடு, சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் சரணடைய நூறு நாட்கள் கெடு விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,106.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.