Show all

ஊசிமணி. பாசிமணி. மோதிரம் வாங்லையோ சாமியோவ்! நாம் தமிழர்கட்சி வேட்பாளர் மன்சூர்அலிகான்- கருத்துப்பரப்புதலில் புதிய யுக்தி

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். ஊசிமணி. பாசிமணி. மோதிரம் வாங்லையோ சாமியோவ் என நத்தம் பகுதியில் கூவி கூவி விற்று தனது கருத்துப்பரப்புதலை தொடங்கியிருக்கிறார் மன்சூர்அலிகான்.

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகர் மன்சூர்அலிகான் தனது கருத்துப்பரப்புதலை வித்தியாசமான முறையில் தொடங்கியிருக்கிறார். அந்த தொகுதிக்குள் நுழைந்து ஒத்த ஆளாக கலக்கத் தொடங்கிவிட்டார் மன்சூரலிகான்! 

தேநீர்கடைகளில் தேநீர் அருந்தி கொண்டே வாக்கு கேட்கிறார், தெருவில் குப்பை வாரிக் கொண்டே வாக்கு கேட்கிறார்.. திடீரென கடைக்குள் நுழைந்து பஜ்ஜி, வடை சுட்டு கொடுத்து வாக்கு கேட்கிறார். கறிக்கடை ஜவுளிக்கடை, மளிகைகடை, பால்கடை, என ஒரு கடையும் விடாமல் வாக்கு கேட்கிறார். கறிக்கடைக்குள் நுழைந்து ஆட்டுக்கறியைத் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டே வாக்கு கேட்கிறார். இதனால் கொஞ்ச நாளிலேயே தொகுதி மக்களின் மனதில் இவர் நுழைந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 

மன்சூர் அலிகான் மணிகள் இப்போதும் அப்படிதான் திடீரென நத்தம் கடைத்தெருவில் ஊசிமணி.பாசிமணி கடையை விரித்து கொண்டு உட்கார்ந்துவிட்டார். ஊசிமணி. பாசிமணி. மோதிரம் வாங்லையோ சாமியோவ் என நத்தம் பகுதியில் கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தார். 

நிறைய மணிகள், மோதிரங்கள் என தரையில் விரிக்கப்பட்ட விரிப்பில் பளபளன்னு காணப்படுகிறது. அந்தக் கடைவீதியில் நிறைய கடைகள் இருந்தாலும் மன்சூரலிகான் கடையிலேயே கூட்டம் நிரம்பி வழிகிறது. மன்சூரலிகான் பக்கத்தில் ஒருவர் 'கரும்பு உழவன் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க' என்று உரக்க சொல்லி கொண்டிருக்கிறார். கடைக்கு வருபவர்களிடம் ஒவ்வொன்றிற்கும் விலை சொல்கிறார் மன்சூரலிகான். அதில் நிறைய பேர் பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,106.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.