23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அதாவது அமெரிக்கா வளர்வதுதான் காரணம் என்று கூறியுள்ளார் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். அதுமட்டுமல்லாமல், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது நடுவண் அரசின் கைகளில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். உலக நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்கள் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கணக்கிலும் பதினைந்து இலட்சம் போடுவதாகச் சொல்லி ஆட்சியை பிடித்தோமே, மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே, என்கிற மனசாட்சியே இல்லாமல் அமெரிக்க வளர்கிறதாம் அதனால் பெட்ரோல் ஏறுகிறதாம்! அடப்பாவிகளா ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் வயிற்றெரிச்சiலை ஏன் இப்படிக் கொட்டிக் கொள்கின்றீர்கள் மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எரிபொருள் விலையைக் குறைக்காததால், நடுவண் அரசை ஒட்டு மொத்த இந்தியாவும்; கடுமையாக விமர்சித்து வருகின்றது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,904.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



