26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் நீட் தேர்வு மாநிலங்களின் கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமானதே. நடுவண் அரசின் கல்வி நிறுவனங்களுக்கு தனி நுழைவுத் தேர்வு. பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டு வகை தேர்விலும் கலந்து கொள்ள முடியும். அந்த வகையில், நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரியும், இந்திய அளவில் 12-ம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனாவும், நடுவண் அரசு நிறுவனமான ஜிப்மர் தேர்விலும் கலந்து கொண்டனர். தரம் தரம் என்று கதை விட்டு மாநிலங்களின் மீது நீட் தேர்வைத் திணிக்கும் நடுவண் அரசுக்கும், வக்காலத்து வாங்கும் பாஜக அடிவருடிகளுக்கும், அவர்கள் திருட்டுத் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்த நிகழ்வு! நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-வது இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12-ம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-ம் இடம் பிடித்துள்ளார். நீட் தேர்வு தரம் சார்ந்ததல்ல, மாநிலங்களின் கல்வி உரிமை பறிப்புக்கானது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,813.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



