Show all

ரூ25000 வரை இழக்கலாம்! உங்களுக்கு பணஇயந்திர அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாதா? கற்றுக்கொள்ளுங்கள்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்தனா என்ற பெண்ணின் பண இயந்திரம் அட்டையைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் கணவர் 25,000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் கணக்கில் பணம் போனாலும், இயந்திரத்தில் பணம் வரவில்லை.

இதனால் வங்கியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இந்திய மாநில வங்கி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டது. 

இதையடுத்து, அந்த இணையர் காவல்துறையில் புகார் அளித்தனர். பின் நுகர்வோர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அதில் வங்கி;, பணம் எடுக்கப்பட்டுவிட்டது, எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் பணம் எங்களுக்கு வரவில்லை என்று இணையர் வாதாடி இருக்கிறார்கள்.

இதை நிரூபிக்க, அந்த இணையர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த பண இயந்திரத்தின் கண்காணிப்பு காணொளி பதிவை வாங்கியுள்ளனர். அதில் அந்த நபர் பணம் எடுக்கவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதை வைத்து அந்த இணையர் வாதாடினார்கள். ஆனால் இந்திய மாநில வங்கி, அந்த காணொளிவில் பண இயந்திர அட்டையின் உரிமையாளர் இல்லை. அந்த பெண் பண இயந்திர அட்;;டையை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளார். சட்டப்படி இது தவறு. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுள்ளது. எடுக்கப்பட்ட பணத்திற்கு இதனால் பண இயந்திர அட்டையின் உரிமையாளர் உரிமை கோர முடியாது என்றுள்ளது.

இந்த நிலையில் நுகர்வோர் அறங்கூற்றுமன்றம், இதில் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மனைவியின் பண இயந்திர அட்டையைக் கணவன் பயன்படுத்தியது தவறு. கணவன் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் காசோலை எழுதி கொடுத்திருக்க வேண்டும், இல்லையென்றால், அனுமதி கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஒருவரின் பண இயந்திரம் அட்டையை இன்னொருவர் பயன்படுத்தியது தவறு என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.

இது போன்று நிறைய பேர்கள் தங்களுக்கு பணஇயந்திர அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாமல் அடுத்தவர் உதவியை நாடுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு பணஇயந்திர அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் 25000 இழப்பும் ஐந்தாண்டு கால மனஉளைச்சலும்! கொடுமைதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,813. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.